Our Feeds


Tuesday, January 3, 2023

ShortNews

இலங்கையில் வேலையின்மை பிரச்சினை: அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினர் தொடர்பில் தகவல்.



இலங்கையில் படித்தவர்கள் மத்தியில் வேலையின்மை விகிதத்தில் ஆண்களை விட பெண்களே அதிகமாகக் காணப்படுகின்றனர். புள்ளி விபரவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.


வேலையின்மை விகிதம் பாலினத்தைப் பொருட்படுத்தாமல் கல்வி மட்டத்துடன் அதிகரிக்கிறது என்றும், இருப்பினும் பெண்களின் வேலையின்மை விகிதம் எப்போதும் ஆண்களை விட அதிகமாக உள்ளது எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.


க.பொ.த. உயர்தரம் மற்றும் அதற்கு மேல் தகைமை கொண்ட பெண்களிடையே இது அதிகமாக காணப்படுகின்றது எனவும் புள்ளி விபரவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


தரம் 05 மற்றும் அதற்குக் கீழ் படித்தவர்களிடையே வேலையின்மை பிரச்சினை மிகவும் குறைவாகக் காணப்படும் அதேவேளை, க.பொ.த. உயர்தரம் மற்றும் அதற்கு மேல் படித்தவர்கிடையே வேலையின்மை அதிகளவில் காணப்படுவதாகவும் புள்ளி விபரவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »