Our Feeds


Tuesday, January 3, 2023

ShortTalk

VIDEO: அரகலய போராட்டத்தை 'போர்ன் எகெய்ன்' வழிநடத்தியது: அமெரிக்க தூதுவரும் பின்னணியில் இருந்தார் - குணவங்ச தேரர் பகிரங்க சாடல்!



இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிரான அரகலய போராட்டத்தின் பின்னணியில் சர்வதேச சதி இருப்பதாக, தேசத்தை காக்கும் தேசிய அமைப்பின் தலைவர் எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.


ஹிரு தொலைக்காட்சியில் சலகுண நிகழ்ச்சியில் நேற்று (2) இணைந்து கொண்ட அவர், போராட்டத்தை முன்னின்று நடத்துவதில் 'போர்ன் எகெய்ன்' (Born Again) என்ற குழு, பிரதான பங்குதாரராக செயற்பட்டதாகக் குறிப்பிட்டார்.

போன் எகெய்ன் எனும் மதக் குழு போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றதுடன், சர்வதேச புலம்பெயர் அமைப்புகளும் காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டதாக எல்லே குணவன்ச தேரர் குறிப்பிட்டார்.

நாட்டை சீர்குலைக்க சர்வதேச சமூகம் விரும்பியதாகவும், போராட்டம் தொடங்கிய தருணத்திலிருந்து, 'ரோ மற்றும் சிஐஏ' புலனாய்வு சேவைகள் அதற்கு ஒரு பாரிய பங்களிப்பை சேர்த்ததாகவும் அவர் கூறினார். இரு புலனாய்வு சேவைகளும் ஒன்றாக இணைந்து இயங்கியது.

1980 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு வந்து அமெரிக்க கிறித்தவத்தை ஆதரிக்கும் குழுக்களில் ஒன்றே போர்ன் எகெய்ன் என்றும், அது நாட்டை சீர்குலைப்பதில் பெரும் பங்காற்றியுள்ளதாக தற்போது தமக்கு தகவல் கிடைத்துள்ளதென எல்லே குணவன்ச தேரர் குறிப்பிட்டுள்ளார்.

முழுப் போராட்டத்தையும் நடத்தியதில் கொரிய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருக்கும் பங்குண்டு. அவர் போராட்டத்தில் கண்ணுக்குத் தெரியாத கரமாக செயற்பட்ட போர்ன் எகெய்னின் உறுப்பினர் என்றும் தேரர் வலியுறுத்தினார்.

சர்வதேச படையெடுப்புகள், போராட்டத்தின் மூலம் நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கும் முயற்சி இடம்பெற்றதாகவும் எல்லே குணவன்ச தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »