கொழும்பில் இன்று முதல் மீண்டும் அரகலய போராட்டம் நடத்தப்படவுள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் அறிவித்துள்ளது.
பல்வேறு தொழிற்சங்கள் மற்றும் சமுகக்குழுக்களுடன் இணைந்து இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.
தாங்கிக் கொள்ள முடியாத வாழ்க்கைச் செலவினங்கள், அரசாங்கத்தின் அடக்குமுறைகள் என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பைச் சுற்றிவளைத்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கு பொதுக்கள் கொழும்புக்கு பிரவேசித்து ஒத்துழைப்பு வழங்குமாறும் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.