Our Feeds


Sunday, January 1, 2023

SHAHNI RAMEES

மெஸ்ஸி-ரொனால்டோவின் நட்பு ரீதியான போட்டி...!

 

மெஸ்ஸி, ரொனால்டோ இருவரும் இம்மாதம் நட்பு ரீதியாக விளையாடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகிய இரு நட்சத்திர வீரர்களும் 2023ஆம் ஆண்டில் இரண்டு வெவ்வேறு கண்டங்களுக்காக விளையாடுகிறார்கள்.

மெஸ்ஸி தனது ஒப்பந்தத்தை பாரிஸ் செயின்ட் ஜெர்மைனில் (PSG) ஒரு வருடத்திற்கு நீட்டித்த நிலையில், ரொனால்டோ சவூதி அரேபிய கிளப் அல் நஸ்ருடன் (Al Nassr) இரண்டரை ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் .

ஜனவரி 19ஆம் திகதி அல் நஸ்ர் மற்றும் அல் ஹிலாலின் ஒருங்கிணைந்த அணியுடன் விளையாட PSG சவுதி அரேபியாவுக்குச் செல்லும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இந்த நூற்றாண்டில் முதல் முறையாக இரு ஜாம்பவான்களும் நேருக்கு நேர் மோதுகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »