Our Feeds


Thursday, January 19, 2023

SHAHNI RAMEES

இலங்கை வந்தடைந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்..!

 

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சற்றுமுன்னர் நாட்டை வந்தடைந்துள்ளார்.

 

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கையை வந்தடைந்த அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்றும் (19) நாளையும் (20) பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இந்நிலையில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ´இலங்கையை கடனில் இருந்து மறுகட்டமைப்பு செய்யும் முயற்சிகளில் வெற்றிகரமான நடவடிக்கையாக அவரது வருகை இருக்கப்போகிறது´ என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »