Our Feeds


Sunday, January 1, 2023

SHAHNI RAMEES

சீனாவிலிருந்து வருபவர்களிற்கு கட்டாய கொவிட் பரிசோதனை – அறிவித்தது அவுஸ்திரேலியா..!

 

சுற்றுலாத்துறை மற்றும் வர்த்தக துறைகளில் கொவிட்நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை தொடர்ந்து சீனாவலிருந்து வருபவர்களிற்கு அவுஸ்திரேலியா கொவிட் சோதனையை கட்டாயமாக்கியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் சுகாதார அமைச்சர் மார்க் பட்லர் இதனை அறிவித்துள்ளார்.



அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் சீனாவை சேர்ந்தவர்கள் தாங்கள் பாதிக்கப்படவில்லை என உறுதிப்படுத்துவதற்காக பயணத்திற்கு 48 மணித்தியாலத்திற்கு முன்னர் கொவிட் பரிசோதனைக்கு தங்களை உட்படுத்தி விபரங்களை சமர்ப்பிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் வேகமாக பரவிவரும் கொரோனா குறித்து அந்த நாடு முழுமையான தகவவல்களை சர்வதேச சமூகத்திற்கு வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சீனா மற்றும் ஹொங்கொங் மக்காவிலிருந்து வருபவர்களிற்கும் அவுஸ்திரேலியா சோதனைகளை கட்டாயமாக்கியுள்ளது.

உலகநாடுகள் பல கடந்த சில தினங்களாக வெளியிட்டகரிசனைகளை குறிப்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் கரிசனைகளை பகிர்ந்துகோள்கின்றது என  சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »