பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் இயலுமை கொண்ட ஒரே நபர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அங்கத்தவரும், இராஜாங்க அமைச்சருமான பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நாடு பல்வேறு சவால்களை எதிர்கொண்ட தருணத்தில், அதனை எதிர்கொள்ளும் நோக்குடன் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே முன்வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ஏனைய தரப்பினர் குழந்தை கதைகளை கூறிக் கொண்டு, சவால்களை ஏற்க மறுத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனாலேயே, தாம் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் இன்று எரிபொருள் வரிசைகள் கிடையாது, எரிவாயு வரிசைகள் கிடையாது என கூறிய அவர், ஏனைய பிரச்சினைகளும் விரைவில் தீர்க்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.