Our Feeds


Thursday, January 19, 2023

ShortTalk

இனி ஆடியோவையும் வட்ஸ்அப் ஸ்டேடசாக வைக்கலாம் - சமூக வலைதளம் முடக்கப்பட்டாலும் இனி WhatsApp பயன்படுத்தலாம்! - New Update



வட்சப் செயலி காலத்துக்கு காலம் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், தற்போது புதிதாக ஐந்து வசதிகளை தமது செயலியில் வட்ஸ்அப்  நிறுவனம் இணைத்துள்ளது.

 

அதன்படி படங்களில் இருந்து எழுத்துருக்களை பிரதி செய்து, அதனை பகிர முடியும். இந்த வசதி முதலில் ஐபோன்களில் (OS16) அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் ஏனைய தொலைபேசிகளுக்கும் அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

படங்களை போர்வர்ட் செய்யும் போது அதனுடன் தகவல்களை அல்லது குறிப்புகளை இணைத்து அனுப்பலாம். அத்துடன் ஏற்கனவே படத்துடன் இருக்கின்ற தகவல் மற்றும் குறிப்புகளை நீக்கிவிட்டு ஃபோர்வட் செய்ய முடியும்.

 

குகுள் ட்ரைவ் பயன்படுத்தாமலேயே அன்ட்ரொயிட் தொலைபேசிகளில் இருந்து வட்ஸ்அப் தொடர்பாடல் பதிவுகளை (செட் ஹிஸ்ட்ரி) பகிர்ந்துக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்பாடல் பதிவுகள் மூன்றாம் தரப்புக்கு தெரியாமல் பாதுகாக்கப்படுகிறது.

 

குரல் பதிவை ஸ்டேட்டஸ் வைக்கலாம். இப்போதும் பலர் வட்சப்களில் படங்கள், வீடியோக்களை ஸ்டேட்டசாக வைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆனால் சிலவகை அன்ட்ரொய்ட் தொலைபேசிகளில் குரல் பதிவினை வட்சப் ஸ்டேடசாக வைக்கும் வசதி அறிமுகமாகிறது.

 

ப்ரொக்சி ஊடாக வட்சப் பயன்படுத்தலாம் – சில நாடுகளில் சமுக வலைத்தளங்கள் முடக்கப்பட்டாலும், வட்சப்பை பயன்படுத்தக்கூடிய வகையிலான ப்ரொக்சி வசதியை வட்சப் தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் ஊடாக வீ.பி.என் பாவிப்பது போல பயன்படுத்த முடியும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »