Our Feeds


Sunday, February 12, 2023

ShortTalk

மலேசியாவுக்கு கடத்த முற்பட்ட 206 நட்சத்திர ஆமைகள் மீட்பு



கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை மலேசியாவிற்கு கடத்த முற்பட்ட 206 நட்சத்திர ஆமைகளை இலங்கை சுங்கத் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

 

விமான நிலையத்தின் விமான சரக்கு ஏற்றுமதி முனையத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக சுங்க பிரதிப் பணிப்பாளரும் (சட்ட) ஊடகப் பேச்சாளருமான சுதத்த சில்வா தெரிவித்தார்.

 

ஆமைகள் ஆடைகளில் சுற்றப்பட்டு, ஆறு பெட்டிகளில் அடைக்கப்பட்டு, உலர்ந்த கடல் உணவுகள் என்று குறியிடப்பட்டிருந்ததாக அவர் கூறினார்.

 

இலங்கை நட்சத்திர ஆமைகள் (ஜியோசெலோன் எலிகன்ஸ்)  இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் காணப்பட்டாலும் கூட அவை ஒரு குறிப்பிட்ட புவியியல் அடையாளத்தைக் கொண்டுள்ளன.

 

உலகில் காணப்படும் மிக அழகான ஆமை இனங்களில் இதுவும் ஒன்றாகும், இதனால் இவை சட்டவிரோத வர்த்தகத்துக்காக, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மிகவும் பயன்படுத்தப்படுகின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »