Our Feeds


Tuesday, February 21, 2023

ShortNews

ஒரே நாளில் 2 ஏவுகணைகளை சோதனை செய்த வடகொரியா : ஐ.நா. கடும் கண்டனம்



ஒரே நாளில் 2 ஏவுகணைகள் சோதனையால் கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்ட பதற்றம் தணிவதற்குள் வடகொரியா நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 2 ஏவுகணைகளை சோதித்து அதிர வைத்துள்ளது.


இதனை தென்கொரியா மற்றும் ஜப்பான் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளன.


இது குறித்து இருநாட்டு இராணுவமும் வெளியிட்ட கூட்டறிக்கையில், 'வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங் அருகே உள்ள மேற்கு கடற்கரை நகரில் இருந்து திங்கட்கிழமை காலை 2 ஏவுகணைகள் வீசப்பட்டன. 


2 ஏவுகணைகளும் 100 கி.மீ உயரத்தில் 400 கி.மீ. தூரம் வரை பறந்து சென்று வடகொரியா மற்றும் ஜப்பானுக்கு இடையிலான கடல் பகுதியில் விழுந்தன' என கூறப்பட்டுள்ளது. 


ஐ.நா. கடும் கண்டனம். 


வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தென்கொரியா, வடகொரியாவை சேர்ந்த 5 நிறுவனங்கள் மற்றும் 4 தனிநபர்கள் மீது புதிய பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது. 


ஜப்பான், அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் கண்டனம் தெரிவித்தன. அதேபோல் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் ஏவுகணைகள் சோதனை தொடர்பாக வடகொரியாவுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »