Our Feeds


Sunday, February 12, 2023

ShortTalk

வர்த்தகர்களிடம் கோடிக்கணக்கான ரூபா மோசடி: நீதிமன்றங்களால் 46 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட பெண் கைது!



சோயாமீட்  விநியோகிக்க  முடியுமெனக் கூறி இரண்டு கோடி ரூபாவுக்கு  மேல் மோசடி செய்ததமை மற்றும்  நீதிமன்றங்களில்  46 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டவருமான பெண் ஒருவரை கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (12) கைது செய்துள்ளனர்.


நுகேகொட நாவல பிரதேசத்தில் வர்த்தக நிறுவனமொன்றை நடத்தி வந்த 38 வயதுடைய திருமணமாகாத பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 குறித்த பெண் சோயாமீட் இறக்குமதி செய்யும் தொழிலை நடத்தியதுடன்  ஒரு இலட்சம் முதல் ஐந்து இலட்சம் ரூபா வரை பணத்தை பெற்றுக்கொண்டு வர்த்தக நிறுவனங்களிடம் நிதி  மோசடி செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  

இந்த மோசடியில் சிக்கிய பல வர்த்தகர்கள் மிரிஹான பொலிஸில் முறைப்பாடு செய்துள்ள நிலையில்,  இந்தப்  பெண் மீது 46 வழக்குகளைப் பதிவு செய்து  பொலிஸார்  விசாரித்துவரும்  நிலையில், அந்த அனைத்து வழக்குகளிலும் ஒரே அமர்வுக்கு மட்டும் ஆஜராகியதால் இந்தச் சந்தேக நபர் மீது 46 பிடிவிறாந்துகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் நாளை (13) கங்கொடவில நீதிவான் நீதிமன்றில்  ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »