காத்தான்குடி மத்திய கல்லூரி 2000 ஆண்டு (சா/த) 2003 ஆண்டு (உ/த) கல்வி கற்ற பழைய மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி செயலமர்விற்கான சான்றிதழ்களை மாணவத் தலைவர்களுக்கு வைபவ ரீதியாக வழங்கும் நிகழ்வு கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
கல்லூரி அதிபர் எம்.ஏ. நிஹால் அஹமட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது மாணவத் தலைவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் பிரதி அதிபர்கள், பகுதி தலைவர்கள், பிரதி பகுதி தலைவர்கள், பாடசாலை ஒழுக்க மேம்பாட்டுக்குழு ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.