Our Feeds


Wednesday, February 8, 2023

ShortNews

கோட்டாவின் கோரிக்கையை நிராகரித்த கோட்டை நீதிமன்றம்!



ஜனாதிபதி மாளிகையில் இருந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி மீட்கப்பட்ட 1 கோடியே 78 இலட்சம் ரூபாய் பணத்தை விடுவிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சட்டத்தரணி விடுத்த கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, இன்று (08) நிராகரித்தார்.


இந்த பணம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என்றும் குறித்த பணத்துக்கு வேறு யாரும் உரிமை கோராவிட்டாலும் பணத்தை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று நீதவான் அறிவித்தார்.


இதுகுறித்து விசாரணை செய்வது நீதிமன்றத்தின் பொறுப்பு என்று அறிவித்த நீதவான், குறித்த கோரிக்கையை நிராகரித்தார்.


இதேவேளை, குறித்த பணம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவின் பேரில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சுமார் 3 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »