Our Feeds


Friday, February 17, 2023

ShortTalk

திருகோணமலையில் அமெரிக்க இராணுவதளமா? இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க அதிகாரி கூறியதென்ன?



திருகோணமலையில் அமெரிக்க இராணுவதளம் குறித்த பேச்சுவார்த்தைகளிற்காக தான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுவதை  அமெரிக்காவின் பாதுகாப்பு விவகாரங்களிற்கான முதன்மை துணை உதவி செயலாளர் ஜெடிடியா பி ரோயல்  நிராகரித்துள்ளார்.


இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க அதிகாரி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோனை சந்தித்துள்ளார்.

திருகோணமலை தளம் குறித்து எதனையும் தெரிவிக்கவிரும்பவில்லை என்ற கருத்துடனேயே அமெரிக்க அதிகாரி பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தார் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் தளமொன்றை அமைப்பதற்கு அமெரிக்காவும் இந்தியாவும் திட்டமிடுகின்றன என ஊகங்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பின்போது அமெரிக்காவுடனான பாதுகாப்பு உறவு இந்தோபசுபிக் பாதுகாப்பு உறவு பிராந்திய ஸ்திரதன்மை ரஸ்ய உக்ரைன் யுத்தத்தின் விளைவுகள் குறித்தும் ஆராய்ந்ததாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க 150 பாதுகாப்பு படையினருக்கு பயிற்சிகளை வழங்குவதுடன் சமீபத்தில் இலங்கை கடற்படையினருக்கு இரண்டு கப்பல்களை வழங்கியிருந்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »