சிரியாவில் பூகம்ப இடிபாடுகளிற்குள் சிக்குண்டிருந்த கைக்குழந்தையொன்று மீட்கப்பட்டுள்ளது.
துருக்கி - சிரியாவில் பூகம்பத்தினால் பெரும் துயரம் ஏற்பட்டுள்ள அதேவேளை அங்கிருந்து வெளியாகும் தகவல்களில் இடிபாடுகளிற்கு இடையிலிருந்து கைக்குழந்தையொன்று மீட்கப்பட்ட தகவலும் கிடைத்துள்ளது.
சிரியாவின் அஜாஸ் நகரில் பூகம்பத்தின் பின்னர் இடிபாடுகளிற்குள்ளிருந்து கைக்குழந்தையொன்றை மீட்பு பணியாளர்கள் மீட்டுக்கொண்டு செல்வதை காண்பிக்கும் படங்களும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.
சிரியாவின் வைட்ஹெல்மெட் மீட்பு பணியாளர்கள் இடிபாடுகளிற்குள் இருந்து மீட்டு கைக்குழந்தையொன்றை பாதுகாப்பாக கொண்டு செல்வதை காணமுடிகின்றது.
பின்னர் அந்த குழந்தை மருத்துவ நிலையமொன்றில் காணப்படுகின்றது.