சவூதி ப்ரோ லீக் போட்டியில் அல் நாசர் அணிக்காக ரொனால்டோ தற்போது விளையாடி வரும் நிலையில், நேற்று நடந்த போட்டியில் அல் நாசர் - அல் வெஹ்தா அணிகள் மோதின.
இந்த போட்டியில் ரொனால்டோ போட்டியின் 21வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். தொடர்ந்து 40வது நிமிடம், 53வது நிமிடத்தில் கோல் அடித்து ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். தொடர்ந்து 61வது நிமிடத்தில் கோல் அடித்து ரொனால்டோ, அல் நாசர் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி அடைய வைத்தார்.
இந்த் போட்டியில் ரொனால்டோ அடித்த முதல் கோல் கிளப் போட்டிகளில், அவரது 500வது கோல் ஆகும்.
ரொனால்டோ இதுவரை கிளப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணிக்காக 311 கோல்களும், மென்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 103 கோல்களும், ஜுவென்டஸ் அணிக்காக 81 கோல்களும, தற்போது அல் நாசர் அணிக்காக 5 கோல்களும் அடித்து , மொத்தமாக 503 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.