Our Feeds


Tuesday, February 14, 2023

SHAHNI RAMEES

சேபால எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோரினார்...

 



தாம் கூறிய கருத்துக்காக மகாநாயக்கர் தலைமையிலான அனைத்து பிக்குகளிடமும், முழு உலக பௌத்த மக்களிடமும் மனப்பூர்வமாக மன்னிப்புக் கோருவதாக சேபால அமரசிங்க எழுத்து மூலம் தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கு இன்று (14) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், இந்த சம்பவம் தொடர்பில் தமது கட்சிக்காரர் சட்டமா அதிபருக்கு எழுத்து மூலம் வருத்தம் தெரிவித்துள்ளதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

கடிதத்தின்படி, எந்தவொரு மத அல்லது இன பிரிவினரின் உணர்வுகளையும் பாதிக்கும் உணர்ச்சிகரமான விஷயங்கள் குறித்து பகிரங்கமாக எந்த கருத்தையும் வெளியிட மாட்டேன் என்று அவர் ஒப்புக்கொண்டதாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.


2022 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் திகதி தனது யூடியூப் சேனலில் புத்தரையும் பௌத்தத்தையும் அவமதிக்கும் வகையில் அறிக்கையொன்றை வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட சேபால அமரசிங்க ஜனவரி 5 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

பௌத்த விவகார ஆணையாளர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு பெப்ரவரி 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »