Our Feeds


Monday, February 27, 2023

Anonymous

மீண்டும் மின்வெட்டு ஏற்படும் ஆபத்து ?

 



மின்சாரக் கட்டணங்கள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் மீண்டும் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்  என இலங்கை மின்சார சபையின், மின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்துள்ளார். 


நாளாந்தம் இரண்டு மணித்தியால மின்வெட்டு  நாட்டில் தொடர்ந்திருந்தால் நிலைமையைக் கட்டுப்படுத்தியிருக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மின்வெட்டை நிறுத்தியதன் பலன் எதிர்காலத்தில் தெரியும் எனவும் மக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »