Our Feeds


Wednesday, February 22, 2023

ShortTalk

SJB க்கு மக்கள் மத்தியில் 31 வீத ஆதரவு JVP க்கு 32 வீத ஆதரவு - SLPP வீழ்ச்சி - IHPs கருத்துக் கணிப்பில் புதிய தகவல்!



பொதுத்தேர்தல் வாக்களிப்பு குறித்து மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் போது ஜனவரியில் ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஜேவிபிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுவது தெரியவந்துள்ளது.


வாக்காளர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின்போது 32 வீதமானவர்கள் ஜேவிபிக்கும் 31 வீதமானவர்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஆதரவு வெளியிட்டுள்ளனர்.

இந்த இரண்டு கட்சிகளும் ஐக்கிய தேசிய கட்சி ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றை விட தெளிவாக முன்னணியில் காணப்படுகின்றன.

ஐஎச்பிஸ்லொட்ஸ் கருத்துக்கணிப்பின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு மூன்று வீதத்தினால் அதிகரித்துள்ளதையும் ஜேவிபிக்கான ஆதரவு ஒரு வீதத்தினால்  அதிகரித்துள்ளதையும் ஐக்கிய தேசிய கட்சிக்கான ஆதரவு ஐந்து வீதத்தினால் அதிகரித்துள்ளதையும் கருத்துக்கணிப்பு புலப்படுத்தியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவிற்கான ஆதரவு 11 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

பொதுதேர்தல் வாக்களிப்பு குறித்த மன உணர்வு உள்ளுராட்சி தேர்தலில் தென்பட்டால் ஜேவிபியும் ஐக்கிய மக்கள் சக்தியும் அனேக இடங்களில் வெற்றிபெறலாம் என்பது கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »