Our Feeds


Wednesday, March 1, 2023

ShortNews

14 லட்சம் பெறுமதியான ஆயிரம் பால்மா பொதிகளை திருடிய 3 பேர் கைது!



தெமட்டகொடை பிரதான சந்தையில் சுமார் ஆயிரம் பால்மா பொதிகளை திருடிய சம்பவம் தொடர்பில் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மூவர் உட்பட சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சந்நேகநபர்கள் மூன்று மாத காலமாக நாளொன்றுக்கு 8-15 பொதிகளைத் திருடி வருவதாகவும் அவற்றின் பெறுமதி தற்போது ரூபாய் 14 இலட்சத்தை அண்மித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கடையில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளை பைகளில் அடைத்து, இரவு நேரங்களில் கடையின் முன் ஊழியர்கள் வைத்திருப்பதுடன், மர்ம நபர்கள் இந்த பால் பவுடர் பாக்கெட்டுகளுடன் கூடிய பையை குப்பை பைகளுக்குள் மறைத்து கடைக்கு வெளியே கடத்தி செல்வது  பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடை ஊழியர்கள் பால் பவுடர் பாக்கெட்டுகளை ஒரு பொலித்தீன் பையில் குப்பை பைகளுடன் சேர்த்து கடையின் முன் குப்பையாக போட்டுவிட்டு, தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபருக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்துவதையடுத்து, அவர் முச்சக்கரவண்டியில் அந்த இடத்திற்குச் சென்று பால் மாவுடன் கூடிய பையை எடுத்து வந்ததாகவும் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »