கண்டி – மஹியங்கனை வீதியின் 18 வளைவு பகுதி மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை போக்குவரத்துக்காக மூடப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
மண்சரிவு மற்றும் கற்பாறை சரிவு காரணமாக குறித்த வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்தவீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.