Our Feeds


Sunday, March 12, 2023

ShortTalk

2016 இன் பின் மீண்டும் ஒன்றுமைப்பட்ட சவுதி அரேபியாவும் - ஈரானும் - சீனாவின் ஒத்துழைப்புடன் பேச்சுவார்தை வெற்றி!



சவூதி அரே­பி­யாவும் ஈரானும் தமக்­கி­டை­யி­லான இரா­ஜ­தந்­திர உற­வு­களை மீள ஸ்தாபிப்­ப­தற்கு இணங்­கி­யுள்­ளயுள்ளதாக அறி­வித்­துள்­ளன.


2 மாதங்­க­ளுக்குள் தூத­ர­கங்­களை மீளத் திறப்­ப­தற்கும், 20 வரு­டங்­க­ளுக்கு முன்னர் கையெ­ழுத்­தி­டப்­பட்ட  பாது­காப்பு மற்றும் பொரு­ளா­தார உடன்­ப­டிக்­கை­களை அமுல்­ப­டுத்­து­வ­தற்கும் இந்­நா­டுகள் வெள்­ளிக்­கி­ழமை இணங்­கி­யுள்­ளன.

சீனாவின் அனு­ச­ர­ணை­யுடன் இவ்­விரு நாடு­கக்கும் இடையில் இணக்­கப்­ப­பா­டுகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

மத்­திய கிழக்கில் எதி­ரா­ளி­க­ளா­க காணப்­பட்ட சவூதி அரே­பி­யா­வுக்கும் ஈரா­னுக்கும் இடை­யி­லான உற­வுகள் மீள ஸ்தாபிக்­கப்­ப­டு­வது அப்­பி­ராந்­தி­யத்தில் புதிய திருப்­பு­மு­னை­யாகும்.

2016ம் ஆண்­டுக்குப் பின்னர் சவூதி அரே­பியா - ஈரா­னிய ராஜ­தந்­திரி உற­வுகள் மீள ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. 

சவூதி அரே­பி­யாவைச் சேர்ந்த ஷியா மதத் தலை­வ­ரான நிம்ர் அல்-­நிம்­ருக்கு 2016ம் ஆண்டு சவூதி அரே­பியா மரண தண்­டனை நிறை­வேற்­றி­யது. அதன்பின், ஈரானில் சவூதி அரே­பிய தூத­ர­கத்தை முற்­று­கை­யிட்டு ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் தாக்­குதல் நடத்­தி­யதை அடுத்து, ஈரா­னு­ட­னான உறவை சவூதி அரே­பியா துண்­டித்­துக்­கொண்­டி­ருந்­தது.

இந்­நி­லையில், இவ்­விரு நாடு­களின் பிர­தி­நி­தி­க­ளுக்கும் இடையில் சீனாவில் 5 நாட்கள் பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்­றன. அதன்பின் உற­வு­களை மீள ஸ்தாபிப்­பது குறித்த அறி­விப்பு வெளி­யா­கி­யுள்­ளது. இப்­பேச்­சு­வார்த்­தைகள் குறித்து முன்னர் அறி­விக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இதற்­குமுன் ஈராக், ஓமா­னிலும் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்­டி­ருந்­தன.

சவூதி அரே­பி­யா­வுக்கும் ஈரா­னுக்கும் இடை­யி­லான உற­வுகள் மீள  ஸ்தாபிக்­கப்­ப­டு­வது மத்­திய கிழக்கு பிராந்­தி­யத்தின் உற­வு­களில் புது­வ­டி­வத்தை ஏற்­ப­டுத்தும் சாத்­தி­ய­முள்­ள­தாக கரு­தப்­ப­டு­கி­றது.

இவ்­விரு நாடு­களும் யமன் யுத்தம் உட்­பட பல மோதல் வல­யங்­களில் எதி­ரெதிர் தரப்­பு­க­ளுக்கு ஆத­ர­வ­ளித்து வரு­கின்­றன. சிரியா, லெபனான், ஈராக்  முத­லான நாடு­களில் தமது செல்­வாக்கை அதி­க­ரித்துக் கொள்­வ­தற்கும் போட்­டி­யி­டு­கின்­றன.

சவூதி அரே­பி­யா­வு­ட­னான உற­வுகள் மீள ஸ்தாபிக்­கப்­ப­டு­வதை வர­வேற்ற ஈரா­னிய வெளி­வி­வ­கார அமைச்சர் ஹூசைன் அமீர் அப்துல்லாஹ், பிராந்­தி­யத்தின் ஏனைய முன்­மு­யற்­சி­க­ளுக்கு  ஈரான் தயா­ரா­கு­வ­தாகவும் தெரி­வித்­துள்ளார்.

சவூதி அரே­பிய வெளி­வி­வ­கார அமைச்­ச­ரான இள­வ­ரசர் பைசால் பின் பர்ஹான் அல் சௌத் கருத்துத் தெரி­விக்­கையில், பிராந்­தி­யத்தில் சுமு­க­ நி­லையை ஏற்­ப­டுத்தும் நோக்­குடன் அர­சியல் தீர்­வு­க­ளுக்கும் பேச்­சு­வார்த்­தை­க­ளுக்கும் சவூதி அரே­பியா தயா­ரா­க­வுள்­ள­மை­யினால் இந்த இணக்­கப்­பாடு ஏற்­பட்­டது எனத் தெரி­வி­த்துள்ளார்.

இந்நிலையில், ஈரான், சவூதி அரே­பிய இணக்­கப்­பாட்டை ஐக்­கிய நாடு­களின் செய­லாளர் நாயகம் அன்­டோ­னியோ குட்­டேரெஸ் வர­வேற்­றுள்ளார். இதற்கு உத­வி­ய­மைக்­காக சீனா­வுக்கு அவர் நன்றி தெரி­வித்­துள்ளார்.

வளை­குடா பிராந்­தியத்தில் நிலை­யான அமை­தி­யையும் பாது­காப்­பையும் உறு­திப்­ப­டுத்தும் முயற்­சி­க­ளுக்கு உதவ ஐநா செய­லாளர் நாயகம் தயா­ரா­க­வுள்ளார் என அவரின் பேச்­சாளர் கூறி­யுள்ளார்.

இது தொடர்பில் வெள்ளை மாளி­கையின் தேசிய பாது­காப்பு பேரவை பேச்­சாளர் ஜோன் கேர்பி கருத்துத் தெரிக்­கையில்,  யமனில் அமை­தியை ஏற்­ப­டுத்த இந்த உடன்­பாடு உத­வு­மானால் நாம் அதை வர­வேற்­கி­றோம் எனக் கூறி­யுள்ளார். 

ஆனால், இந்த உடன்­பாட்டின் தமது கடப்­பா­டு­களை ஈரா­னி­யர்கள் நிறை­வேற்­று­வார்­களா என்­பதை பொருந்­தி­ருந்து பார்க்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.  

பிரான்ஸும் இந்த உடன்பாட்டை வரவேற்றுள்ள அதே வேலை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை ஈரான் கைவிட வேண்டும் என பிரான்ஸ் கூறியுள்ளது. 

ஈரானின் ஆதரவைக் கொண்ட, லெபனானின் ஹிஸ்புல்லாஹ் இயக்கமும் இந்த உடன்படிக்கை சிறந்த முன்னேற்றம் என வரவேற்றுள்ளது. ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தை சவூதி அரேபியா 2016ம் ஆண்டு முதல் பயங்கரவாத இயக்கமாக அறிவித்து, தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »