Our Feeds


Sunday, March 26, 2023

Anonymous

29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம் நாளை முதல் ஆரம்பம்!

 



லங்கையில் குறைந்த வருமானம் பெறும் 29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் வேலைத்திட்டம் நாளை (27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. 


விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல் அரிசியாக மாற்றப்பட்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதன்படி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதாந்தம் 10 கிலோ அரிசி வீதம் 2 மாதங்களுக்கு அரிசி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நாளை அரிசி விநியோகிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. 

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் பல மாவட்டங்களில் உள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் அரிசி வழங்கப்படும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »