Our Feeds


Thursday, March 9, 2023

ShortTalk

வவுனியாவில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் மரணம் - உடற்கூறாய்வு அறிக்கை வெளியானது!



வவுனியா குட்செட் வீதியில் நேற்றுமுன்தினம் சடலமாக மீட்கப்பட்டவர்களின் மரணத்திற்கான காரணம் அறியப்படாத நிலையில் மேலதிக பரிசோதனைகளுக்காக குருதிமாதிரிகள் அரச பகுப்பாய்வு தினைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன.

 

வவுனியா குட்செட்வீதியில் இரு சிறுமிகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் நேற்றுமு ன்தினம் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.

 

குடும்பத்தலைவர் தூக்கில்தொங்கிய நிலையிலும் ஏனையவர்கள் படுக்கையில் உறங்கியபடியும் குறித்த சடலங்கள அவதானிக்கப்பட்டன.

 

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். சடலத்தை பார்வையிட்ட வவுனியா நீதவான் அதனை உடற்கூற்று ஆய்வுக்கு உட்படுத்துமாறு பொலிசாருக்கு பணித்திருந்தார்.

 

சடலங்கள் நேற்றுமுன்தினம் மாலை மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டன. குறித்த சடலங்களுக்கான உடற்கூறாய்வு பரிசோதனை நேற்று காலை இடம்பெறவிருந்த நிலையில் சுகாதார தொழிற்சங்கத்தினரின் பணிபகிஸ்கரிப்பு காரணமாக அதில் தாமதம் ஏற்ப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் மாலை 5.30 மணியளவில் உடற்கூற்று பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தன.

 

பரிசோதனைகளின் முடிவுகளின் பிரகாரம் அவர்களது உடலில் நஞ்சருந்தியமைக்கான எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.  மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் குருதி மற்றும் சிறிநீர் மாதிரிகள், இரைப்பையில் பெறப்பட்ட உணவுபதார்த்தம் போன்றன மேலதிக பரிசோதனைகளுக்காக அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

 

குறித்த சம்பவத்தில் குட்செட்வீதி உள்ளக வீதியை சேர்ந்த சேர்ந்த சிவபாதசுந்தரம் கௌசிகன் வயது 42, அவரது மனைவியான கௌ.வரதராயினி வயது 36, இரு பிள்ளைகளான மைத்ரா வயது 9 கேசரா வயது 3 ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டனர்.

 

உயிரிழந்தவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்

 

வவுனியா சதிஸ்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »