மன்னார் சிலாவத்துறை மற்றும் வான்கலை கடற்பரப்புகளில் சட்டவிரோதமாக கடல் அட்டைகளைப் பிடித்த 08 பேரை கடற்படையினர் கைதுசெய்தனர்.
சிலாவத்துறை கடற்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி கடல் அட்டைகளைப் பிடித்த மூவரும் வான்கலை கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐவரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது பிடிக்கப்பட்ட கடலட்டைகளும் அதற்கு பயன்படுத்திய டிங்கி படகு மற்றும் உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட நபர்கள் 33 முதல் 54 வயதுக்குட்பட்ட கற்பிட்டி மற்றும் வான்கலையில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் அவர்களது உபகரணங்கள் மற்றும் கடல் அட்டைகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி மற்றும் மன்னார் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.