காலணி தொழிற்சாலை ஒன்றில் 9 இலட்சத்து 54 ஆயிரத்து 750 ரூபா பெறுமதியான 355 ஜோடி பெண் காலணிகளை திருடிய நபரை மாதம்பை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த சம்பவத்தில் மாதம்பை பழைய நகரைச் சேர்ந்த நாற்பத்தொன்பது (49) வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
மாதம்பை பழைய நகரில் உள்ள பெண்களுக்கான காலணிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர் இரவில் தொழிற்சாலையின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்து அங்கிருந்த காலணிகளை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாதம்பை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில், அந்தப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டதுடன், மறைத்து வைக்கப்பட்டிருந்த பாதணிகளுடன் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
திருடப்பட்ட காலணிகளை பின்னர் விற்பனை செய்யும் நோக்கில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பாதணிகளுடன் சந்தேகநபர் ஹலவத்தை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.