Our Feeds


Friday, March 10, 2023

Anonymous

A/L பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படுவது இரண்டு வாரங்கள் தாமதமாகும் - கல்வி அமைச்சர்

 



பேராசிரியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது இரண்டு வாரங்கள் தாமதமாகும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மாணவர்களின் விடைத்தாள்களை சரிபார்ப்பதை வரியுடன் சேர்த்து குழப்ப வேண்டாம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

மாகாணசபைத் தேர்தல் ஒத்திவைப்பு தொடர்பான விவாதத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

விடைத்தாள்களை ஆய்வு செய்வது மேலும் இரண்டு வாரங்கள் தாமதமாகும். பின்னர் இரண்டு வாரங்களுக்குப் பிறகு தான் முடிவுகளும் வெளியிடப்படும். இதனால் சாதாரண தரப்பரீட்சை மே மாதம் நடுப் பகுதியில் நடாத்த முடியாதுள்ளது எனவும் தெரிவித்தார்.

அரசாங்கத்தில் குறைகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். அவற்றை உருவாக்க நாங்கள் தயாராக உள்ளோம். தேர்தல் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். சர்வதேச நாணய நிதி 20ம் திகதி கிடைக்கும். அப்போது அனைத்து சலுகைகளும் கிடைக்கும். விரும்பத்தகாத முடிவுகளை எடுக்க முடியாது. கோட்டாபயவின் கதைகளை எழுதியவர்கள் கூட தற்போது அவரை விமர்சிக்கின்றனர்.

ஆசிரியர்கள் கேட்ட அனைத்தையும் நாம் வழங்கியுள்ளோம். இறுதியாக சம்பளத்தினையும் உயர்த்தினோம். இது நமக்காக கேட்பதல்ல, மாணவர்களின் நலனுக்காக அவர்களது எதிர்காலத்திற்காக கேட்பது என அமைச்சர் மீண்டும் தெரிவித்திருந்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »