வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியின் ஏ.டி.எம் அட்டையில் இருந்து சுமார் 50 இலட்சம் ரூபாவை எடுத்த பணிப்பெண் உட்பட மூவரை கைது செய்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பணிப்பெண்ணின் மகள் மற்றும் மருமகனும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
11 வருடங்களாக வீட்டில் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்த பெண்ணிடம் குறித்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி, நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் இருந்த போது ஏ.டி.எம் கார்ட் மற்றும் அதன் பின் இலக்கத்தை கொடுத்து சிகிச்சைக்கு தேவையான பணம் செலவழிக்குமாறு தெரிவித்த நிலையில், அந்த அதிகாரி, குணமடைந்து வீட்டுக்கு வந்த பிறகு இரகசியமாக 50 இலட்சம் பணம் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்ததாக புகார் அளித்தார்.
தனது வங்கிப் புத்தகத்தில் ஒரு கோடியே ஐம்பது இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணம் இருந்ததாகவும், இரண்டு பிள்ளைகளுக்கும் தலா 50 இலட்சம் ரூபாவை கொடுத்து மீதிப் பணத்தை வங்கியில் வைப்பிலிட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புகாரின்படி, விசாரணையில், சந்தேக நபர் வங்கி அதிகாரியின் ஏடிஎம் கார்டில் இருந்து ஆறு மாதங்களாக பணம் எடுப்பது சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பணிப்பெண்ணிடம் நடத்திய விசாரணையில், ஏடிஎம் கார்ட் அவரது மகள் மற்றும் மருமகனிடம் ஒப்படைக்கப்பட்டு, அந்த பணத்தில் தங்க நகைகளை வாங்கியதோடு அவர்களுக்கு வீடு ஒன்றையும் வாடகைக்கு எடுத்து சென்றுள்ள.சந்தேக நபர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸார் கூறுகின்றனர். மேலும் அவர்கள் வெளியில் செல்வதற்கும், ஆடைகள் வாங்குவதற்கும் பணத்தை பயன்படுத்தியதாக அவர்கள் கூறியதாக சந்தேக நபர் கூறினார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும், மொரட்டுவ எகொட உயன மோதர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.