Our Feeds


Monday, March 13, 2023

Anonymous

கண்டி, பெண் கொலை சம்பவம் - மோப்ப நாயின் உதவியுடன் சந்தேகநபர் கைது!

 



கண்டி அலவத்துகொட பிரதேசத்தில் வயல்வெளியில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரால் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.


கண்டி உத்தியோகபூர்வ நாய்கள் பிரிவின் உதவியுடன் அலவத்துகொட பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் வயல்வெளியில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெண்ணொருவரின் சடலம் நேற்று முன்தினம் (11) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய திருமணமான பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் வீட்டில் இல்லை என கணவர் அவரது தாயாருக்கு அறிவித்ததன் அடிப்படையில் அவர் தேடிய போது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கணவருடன் சேர்ந்து கடை ஒன்றை நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

நேற்றிரவு 9.50 மணியளவில், தனது கணவர் கடையை மூடிவிட்டு இறுதிச் சடக்கு நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக அங்கிருந்து சென்றுள்ளார்.

பின்னர், அதிகாலை 2 மணியளவில் வீடு திரும்பியதாக பொலிசார் தெரிவித்தனர்.

பின்னர் காலையில் இருவரும் வசித்த வீட்டின் பக்கத்திலிருந்து அலறல் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

மேலும், உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

இது கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பொலிஸார் கணவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »