Our Feeds


Thursday, March 16, 2023

Anonymous

இலங்கையில் புதிய வகை பல்லி இனங்கள் இரண்டு கண்டுபிடிப்பு

 



அம்பாறை - எத்தாகல பாதுகாப்பு வனப் பகுதி  மற்றும் குருணாகல் - கல்கிரிய வனப் பகுதியில் இரண்டு புதிய  பல்லி  இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

எத்தாகல  பாதுகாப்பு வனப் பகுதியில் காணப்படும் இனத்துக்கு  ஜயவீர என்றும், கல்கிரிய சரணாலயத்தில் காணப்படும் இனத்துக்கு நாணயக்கார என்றும் பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த இனமானது சூழலியலாளர்களான சாந்தசிறி ஜயவீர மற்றும் ஆனந்த லால் நாணயக்கார ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த பல்லி இனங்கள் குறித்த வனப் பகுதியில் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவற்றின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »