ஊழல், மோசடிகள், உறவுமுறைகள் அற்ற தூய்மையான மக்களின் அரசாங்கத்தை அமைப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
தாம் நாட்டின் நலனுக்காகவே சர்வகட்சி அரசாங்கத்தை முன்னிறுத்துவதாகவும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளை எதிர்பார்க்கவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.