இலங்கை சனத்தொகையில் 15 சதவீத பெண்களும் 6.3 சதவீத ஆண்களும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது ஆண் மற்றும் பெண் மக்களிடையே அதிக எடை மற்றும் உடல் பருமன் அதிகரித்துள்ளதாக மருத்துவ நிபுணரான் சாந்தி குணவர்தன தெரிவித்துள்ளார்.
செய்தி மாநாட்டில், கருத்துக்களை வெளியிட்ட அவர், பெண்கள் மத்தியில் உடல் பருமன் மற்றும் அதிக எடை 2021 இல் 43 சதவீத ஆக அதிகரித்திருந்தது.
இது 2015 இல் 34வீதமாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் ஆண்களை பொறுத்தவரையில், உடல் பருமன் தொடர்பில், 2015 இன் 24.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2021 இல் அது 30 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று மருத்துவ நிபுணரான சாந்தி குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
உடல் நிறை குறியீட்டெண் அடிப்படையில்,உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி, ஆரோக்கியமான ஒருவரின் பிஎம்ஐ என்ற உடல் பருமன் கணக்கீடு 18.5 முதல் 24.9 வரை இருக்க வேண்டும்.
30க்கு மேற்பட்டவர்களின் பிஎம்ஐ 25 முதல் 29.9க்கு இடைப்பட்ட பிஎம்ஐ அதிக எடை கொண்டதாகவும் இருக்கவேண்டும் என்றும் மருத்துவ நிபுணரான சாந்தி குணவர்தன தெரிவித்துள்ளார்.