தஜிகிஸ்தானின் நோவோபோட் நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் 51 கிலோமீற்றர் பகுதியில் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் அல்லது பொருள் சேதம் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.