மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியின் சத்துருக்கொண்டான் பகுதியில் பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (23) இரவு இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், பஸ் சாரதியை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர் அடையாளம் காணப்படவில்லை எனவும் கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தனியர் சொகுசு பஸ் நேற்று இரவு 10 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து பயணித்த போது கொழும்பு வீதியின் சத்துருக் கொண்டான் பகுதியில் பெண் ஒருவர் மீது மோதியதை அடுத்து சம்பவ இடத்திலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த பெண் அடையாளம் காணப்படாத நிலையில் சடலத்தை மீட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்ததுள்ளதுடன், பஸ் சாரதியை கைது செய்துள்ளதாகவும் குறித்த பெண் தொடர்பாக அடையாளம் தெரிந்தவர்கள் கொக்குவில் பொலிஸாருடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.