ஜப்பானைச் சேர்ந்த பெண் சுற்றுலாப்பயணியை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்த சுற்றுலா வழிகாட்டியொருவர் அனுராதபுரம் சுற்றுலா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சுற்றுலாப்பயணியின் முறைப்பாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் புனித நகர பகுதிக்கு தான் சென்றவேளை இந்த நபர் தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தினார் என ஜப்பானைச் சேர்ந்த பெண் சுற்றுலாப்பயணி முறைப்பாடு செய்துள்ளார்.