வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணம் போதுமானதா என்பதை தேர்தல்கள் ஆணைக்குழு பரிசீலிக்க வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இந்த நேரத்தில் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் முக்கியமா, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டுமா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் சட்டத்தை மீறியவர்கள் இன்று ஜனநாயகம் பற்றி பேசுவது கேலிக்கூத்தானது என்றும் அமைச்சர் கூறினார்.