Our Feeds


Thursday, March 9, 2023

ShortTalk

இடைவிடாது இரவு முழுவதும் உக்ரைன் மீது ஏவுகனைத் தாக்குதல் நடத்திய ரஷ்ய ராணுவம்!



உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் திகதி தனது இராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியுள்ளது.


ரஷ்யாவின் இந்த இராணுவ நடவடிக்கைக்கு மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் பாதுகாப்பு படை தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றது. 


இந்த போரில் இருதரப்பிலும் பெருத்த உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. உக்ரனின் உள்கட்டமைப்பை தகர்க்கும் நோக்கில் ரஷ்ய இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. 


அந்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள், இராணுவ தளங்களை குறித்து தாக்குதல் நடத்துவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. 


இருப்பினும் ரஷ்ய இராணுவம் பொதுமக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. 


இது குறித்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவிக்கையில் 

'பொதுமக்களை அச்சுறுத்தும் நோக்கில் ரஷ்யா செயல்பட்டு வருகின்றது. அவர்களின் திட்டம் பலனளிக்காது. தங்கள் செயல்களுக்கு ரஷ்யா பதில் சொல்லியே தீர வேண்டும்' என்று கூறியுள்ளார். 


இந்த நிலையில் உக்ரைனில் இரவு முழுவதும் பல்வேறு பகுதியில் ரஷ்ய இராணுவம் தொடர் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக உக்ரைனின் முக்கிய நகரங்களில் மின்சார தடை ஏற்பட்டுள்ளது. 


மேலும், ஒரு அணுமின் நிலையத்தின் மின்பகிர்மானம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »