ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவிடம் இருந்து இலங்கையின் கடன் திட்டத்திற்கு அனுமதி கிடைத்திருக்கும் நிலையிலேயே ஜனாதிபதியின் இந்த உரை இடம்பெற்றுள்ளது.
குறித்த உரையில் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாவது, இனிவரும் நாட்களில் இலங்கையை வங்குரோத்து நாடாக கருத முடியாது. சாதாரண கொடுக்கல் வாங்கல்களை இனி முன்னெடுத்து செல்ல முடியும். அத்தோடு, எமது அந்நிய செலாவணி இருப்பு அதிகரித்துச் செல்லுமாயின் இறக்குமதி கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் எனவும் ஜனாதிபதி தமது உரையில் தெரிவித்தார்.