Our Feeds


Monday, March 6, 2023

ShortTalk

எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துடன் இந்திய இராஜதந்திரி பார்த்தசாரதி கொழும்பில் முக்கிய பேச்சு!



எதிர்க்கட்சித் தலைவர் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் ஓய்வுபெற்ற இந்திய இராஜதந்திரி கோபாலசுவாமி பார்த்தசாரதி ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.


இந்த சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவும் கலந்துகொண்டார்.


இலங்கையின் கடந்தகால அரசியல் மற்றும் முக்கிய விடயங்கள் குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட்டன.


முக்கிய இராஜதந்திரி பார்த்தசாரதி 


1983 கறுப்பு ஜூலைக்குப் பிறகு அன்றைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி இலங்கையில் முரண்பட்டு நிற்கும் இரு தரப்பினருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்வதற்கு இந்தியாவின் நல்லெண்ண உதவிகளை வழங்க முன்வந்தார். அந்த மத்தியஸ்த முயற்சிகளை முன்னெடுப்பதற்கு ஆற்றல் வாய்ந்த விசேட தூதுவர் ஒருவரை நியமிக்கவேண்டியிருந்தது.அதற்குப் பொருந்துபவராக இராஜதந்திர பதவிகள் பலவற்றை வகித்தவரும் முன்னாள் வெளியுறவுச் செயலாளருமான கோபாலசுவாமி பார்த்தசாரதியை இந்திரா காந்தி அடையாளம் கண்டார்.


இந்திரா காந்தியின் நம்பிக்கைக்கு பெரிதும் பாத்திரமானவர் பார்த்தசாரதி என்பது ஒரு மேலதிக அனுகூலமாகவும் இருந்தது. வெளிநாட்டுக் கொள்தையிலும் உள்நாட்டுக் கொள்கையிலும் சர்ச்சைக்குரிய விவகாரங்கள் தொடர்பில் அடிக்கடி அவருடன் திருமதி காந்தி ஆலோசனை கலப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


பிராந்திய சபைகளுக்கு ( Regional Councils) அதிகாரப்பரவலாக்கலுக்கான ஒரு தொகுதி யோசனைகள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தியதே பார்த்தசாரதியின் தனித்துவமான பங்களிப்பாகும். அந்த யோசனைகளே 'இணைப்பு சி ' ( Annexure - C ) என்று பிரபல்யமாக அழைக்கப்படுபவையாகும். 1983 ஆகஸ்ட் தொடக்கம் டிசம்பர் வரையான 4 மாத காலகட்டத்திற்குள் கொழும்பிலும் புதுடில்லியிலும் ஜனாதிபதி ஜெயவர்தனவுடன் நடத்திய சந்திப்புகளில் இந்த இணைப்பு 'சி' யைப் பூரணப்படுத்தும் செயற்பாடுகளை பார்த்தசாரதி நிறைவுசெய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »