மெல்சிறிபுர ரம்பே பகுதியைச் சேர்ந்த 3000 இற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு அரசாங்கம் வழங்கிய மானியங்களை பறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மெல்சிறிபுர ரம்பே விவசாய சேவை நிலையத்தில் பணியாற்றிய சம்பந்தப்பட்ட அபிவிருத்தி அதிகாரிக்கு விவசாய அபிவிருத்தி திணைக்களம் தடை விதித்துள்ளது.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் விவசாயிகள் பிரதிநிதிகள் குழுவொன்று செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.