வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற போர்வையில் ஆட்கடத்தலை தடுக்கவும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தை திருத்தியமைத்து விதிகளை வலுப்படுத்த தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணியின் (NAHTTF) அவதானிப்புகளைப் பெறுவதற்கான விசேட கூட்டம் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நடைபெற்றது.
ஆட்கடத்தலை தடுக்கும் விதமாக, பணி நிமித்தமாக வெளிநாடு செல்பவர்களின் தகவல்களை டிஜிட்டல் மூலம் கோப்பு அமைப்பில் பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
தயாரிக்கப்பட்ட புதிய திருத்தங்களுடன், ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணியின் (NAHTTF) அவதானிப்புகளுடன் தொடர்புடைய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கடுமையாக்குவதற்கும் அதற்கேற்ப புதிய திருத்தங்களைச் செய்வதற்கும் முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன