Our Feeds


Monday, March 20, 2023

News Editor

நிதி கிடைக்காவிடின் நாடு நகராது - பந்துல குணவர்தன


 சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து  இன்றைய தினத்துக்குள் (20) கடன் உதவி கிடைக்கப் பெறாவிட்டால் இரண்டு வாரங்களுக்கும்  நாட்டை கொண்டு செல்ல முடியாது என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கடனை அடைக்க முடியாத நாடாக உலகமே வழக்கு தொடரும் நிலைக்கு வந்துள்ளோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
 
களுத்துறை விமானப்படை தளத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார். 
 
இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர், குறிப்பாக 1977ஆம் ஆண்டுக்கு பின்னர் உலகத்திடமிருந்து இலங்கை கடன்பெறத் தொடங்கியதாகத் தெரிவித்த அவர், பணத்தை மீள செலுத்த முடியாத நிலையில் பணம் அச்சிடப்பட்டது என்றார்.

இதற்கு ஒருவர் பொறுப்பேற்க முடியாது என்றும் ஜனாதிபதியொருவரோ, பிரதமர் ஒருவரோ அல்லது அரசியல்வாதி ஒருவரோ இதற்கு பொறுப்பேற்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

எனவே, இந்த கடன் படுகுழியில் இருந்து வெளிவர உதவுமாறு உலகத்திடம் கோரிக்கை விடுத்ததாகத் தெரிவித்த அவர், அதற்காக 28 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் அதில் இருந்து 20 நாடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »