இலங்கையில் உள்ள அனைத்து இ.போ.ச டிப்போக்களும் திட்டமிட்டபடி இயங்குவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் உறுதிப்படுத்தினார்.
இன்று காலை 11.00 மணி நிலவரப்படி 107 டிப்போக்களும் திட்டமிட்ட அட்டவணையின் படி இயங்குவதாகவும், ஜே.வி.பி தொழிற்சங்கம் தவிர்ந்த 8 தொழிற்சங்கங்களில் ஏழு தொழிற்சங்கங்கள் முழுமையாக இயங்குவதாகவும் போக்குவரத்துச் சபையின் தலைவர் தெரிவித்ததாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.