பாவனையாளர் விவகார அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் சுஜானி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அண்மையில் ,அமைச்சர் நளின் பெர்னாண்டோவின் உறவினர் ஒருவரின் களஞ்சியத்தை முற்றுகையிட்ட விடயம் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சைகளையடுத்தே சுஜானி தலைமைப் பொறுப்பை துறந்துள்ளார்.
அதிகாரசபையின் புதிய தலைவர் ஒருவர் அமைச்சரால் நாளை நியமிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.