Our Feeds


Wednesday, March 8, 2023

ShortTalk

இலங்கை கொடூரமான பாதுகாப்பு சட்டங்களை கைவிடவேண்டும் - ஐ.நா



இலங்கை  கொடூரமான பாதுகாப்பு சட்டங்களை  கைவிடவேண்டும் என ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கியநாடுகளின் மனித உரிமைகளிற்கான உயர்ஸ்தானிகர் வொல்க்கெர் டேர்க் இதனை தெரிவித்துள்ளார்.


பலவீனப்படுத்தும் கடன் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியன இலங்கையில் பொதுமக்கள்  அடிப்படை பொருளாதார சமூக உரிமைகளை பெறுவதை மட்டுப்படுத்தியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

மீட்பு கொள்கைகள் சமத்துவம் இன்மைகளிற்கு தீர்வை காணவேண்டும்  வெளிப்படைத்தன்மை ஆட்சியில் பொறுப்புக்கூறல் மற்றும் ஆழமாக வேருன்றியுள்ள தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதல் ஆகியவற்றை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொடுரமான பாதுகாப்பு சட்டங்கள் பாதிக்கப்பட்டவர்கள் சிவில் சமூகத்தினரை  துன்புறுத்துதல் கண்காணித்தல் ஆகியவற்றையும் முடிவிற்கு கொண்டுவரவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை தொடர்பான நேர்மையான முழுமையான நிலைமாற்று நீதி செயற்பாட்டிற்கு ஆதரவளிப்பதற்கு தனது அலுவலகம் தயாராவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »