தொழிற்சங்கங்கள் இன்று (15) முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளினால் நாட்டுக்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலர் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறு நுவரெலியாவிற்கு வந்திருந்த பிரான்ஸ் மற்றும் ரஷ்ய பிரஜைகள் குழுவொன்று இன்று புகையிரதத்தில் பயணிக்க திட்டமிட்டிருந்தனர்.
நானுஓயா நிலையத்தில் இருந்து எல்ல புகையிரத நிலையம் வரை புகையிரதத்தில் பயணிக்க அவர்கள் திட்டமிட்டிருந்த போதிலும், வேலைநிறுத்தம் காரணமாக அந்த நடவடிக்கைகள் தடைபட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.