இந்திய அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கற்கைநெறி ஒன்றில் ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்க ஊழியர்களும் பங்குபற்றுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்..
இந்திய அரசுக்குச் சொந்தமான இந்திய முகாமைத்துவ நிறுவகத்தின் மூலம் இந்திய வெளிவிவகார அமைச்சினால் இந்த கற்;கை நெறி நடத்தப்படுகிறது.
இணையம் ஊடான இந்த நான்கு நாள் கற்கை நெறி இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகுகிறது.
இந்த கற்கைநெறியில் பங்குபற்றுவதற்கு தலிபான்களுக்கு இந்திய வெளிவிவகார அமைச்ச அழைப்பு விடுத்ததாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதில் பங்குபங்குகின்றனர்.
இதில் பங்குபற்றுவதற்கு தமது அமைச்சின் ஊழியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியை இந்தியா அங்கீகரிக்கவில்லை. கடந்த ஜுன் மாதம் தனது தூதரகம் ஒன்றை காபூலில் இந்தியா திறந்தது. அது தொழில்நுட்ப தூதரகம் என இந்தியா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் அழைப்பு குறித்து தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
வெளிவிவகார அமைச்சு ஊழியர்களுக்காக மார்ச் 14 முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறும் குறுகிய கால பயிற்சிநெறியில் பங்குபற்றுமாறு காபூலிலுள்ள இந்தியத் தூதுரகம் மூலம், ஆப்கானிஸ்தான் வெளிவிவகார அமைச்சுக்கு அழைப்பிதல் அனுப்பப்பட்டுள்ளதாக 'தாரி' மொழியில் வெளியிடப்பட்ட குறிப்பு ஒன்றில் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தலிபான்களின் ஆட்சி தான் அங்கீகரிக்கவில்லை என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இது இணையத்தளம் மூலமான கற்கை நெறி எனவும், இதில் பங்குபற்றுவதற்கு ஆப்கானிஸ்தான் உட்பட உலகம் முழுவதுமுள்ள மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார, தலிபான்களின் ஆட்சியையோ அதன் வெளிவிவகார அமைச்சையோ அதன் ராஜதந்திரிகளையோ இந்திய அரசு அங்கீகரிக்கவில்லை எனவும் அந்த அதிகாரி கூறினார் என செய்தி வெளியாகியுள்ளது.
(வைப்பகப்படம்)