சீனாவின் தென்மேற்கு சின்ஜியாங் மாகாணத்தில் அமைந்துள்ள ஹோட்டன் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கமானது 4.7 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் தரைமட்டத்தில் இருந்து 17 கி.மீ. ஆழத்தில் உருவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.