Our Feeds


Wednesday, March 22, 2023

Anonymous

காரிலிருந்து அசால்டாக பேக்கை திருடும் பக்கா திருடன் - CCTV காட்சியில் பதிவு

 



ரஞ்சித் ராஜபக்ஷ


நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களில் பயணப்பொதிகளை களவாடும் சம்பவம் தொடர்பிலான காட்சியொன்று, சிசிரிவி கமெராவில் பதிவாகியுள்ள சம்பவமொன்று ஹட்டன் நகரில் இடம்பெற்றுள்ளது.


ஹட்டன் நகரிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வருகை தரும் நுகர்வோரின் பயணப்பொதிகளிலிருந்து பெறுமதியான பொருட்கள் களவாடப்படும் சம்பவம் தொடர்பில் வர்த்தகர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் நுகர்வோர் செய்த முறைப்பாட்டுக்கமைய, வாகனங்களில் இருந்து பயணப்பொதிகள், கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களின் பொதிகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை திருடும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இவ்வாறு பொருட்களை திருடுவோர் ​தொடர்பில் விழிப்பாக இருக்குமாறு ஹட்டன் பொலிஸார், பொதுமக்களிடமும் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »