சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு கிடைத்துள்ள விரிவான நிதி வசதி தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று விசேட விவாதம் ஒன்றை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தொடர்பான ஆவணம் சற்று முன்னர் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் இந்த விசேட உரையை அடுத்தே இந்த விவாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் கோரிக்கையை அடுத்து இந்த விவாதத்தை இன்று முதல் ஆரம்பிக்க அரசாங்கத் தரப்பில் சபையில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.